இந்தியா

ஆந்திராவில் வெப்ப நிலை 116.6 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது: மக்கள் அவதி 

DIN

ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், இருமாநிலங்களிலும் கோடை வெப்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடும் வெப்பத்தினால் 87 பேர் உயிரிழந்துள்ளனர். பிரகாசம், குண்டூர், நெல்லூர் மாவட்டங்களில் தலா 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் வெப்ப நிலை 116.6 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு பதிவாகியிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதே நிலைதான் இன்னும் ஒரு சில நாட்களுக்கும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய வேளையில் வெப்பம் அதிகரிப்பதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT