இந்தியா

வெளியுறவுக் கொள்கையில் ஆப்ரிக்காவுக்கு முக்கியத்துவம்: மோடி பேச்சு 

PTI

காந்திநகர்: கடந்த 2014ம் ஆண்டு நான் பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்ரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று பிரதமர் மோடி கூறினார்.

குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற 52வது ஆப்ரிக்கா வளர்ச்சி வங்கியின் ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியா - ஆப்ரிக்கா இடையேயான நல்லுறவு வலுப்பெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு நான் பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்ரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 

இந்தியா - ஆப்ரிக்கா இடையே கூட்டுறவு அடிப்படையிலான நல்லுறவு நீடிக்கிறது. கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஆப்ரிக்காவுடன் கொண்டிருக்கும் உறவானது, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது.

கடந்த 15 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், இந்தியா - ஆப்ரிக்கா இடையேயான வர்த்தகம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டில் எடுத்துக் கொண்டால் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT