இந்தியா

பல்கலையில் பிரியாணி சமைத்த மாணவருக்கு ரூ.6,000 அபராதம்!

Raghavendran

தில்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரியாணி சமைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் அரேபிய, ஆப்பிரிக்க மொழிப்பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவர் முகமது அமீர், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

அங்குள்ள சபர்மதி மாணவர் விடுதியில் தங்கியுள்ள அமீர், கடந்த ஜுன் மாதம் 27-ந் தேதி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளப் பகுதியின் அருகில் பிரியாணி சமைத்துள்ளார்.

மேலும், சமைத்த இந்த பிரியாணியை சக மாணவர்களுடன் சேர்ந்து அங்கேயே உண்டு மகிழ்துள்ளார். இது பல்கலைக்கழக வீதிமீறல் செயல் என்று மாணவரிடம் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலைியல், மாணவர் அமீருக்கு விதிமீறல் செயலில் ஈடுபட்ட காரணத்துக்காக ஜே.என்.யூ பல்கலைக்கழகம் ரூ.6,000 அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையை அடுத்த 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மாணவர் முகமது அமீர் இதுபோன்று பல்கலைக்கழகத்தில் பல விதிமீறல் செயலில் ஈடுபட்டு வருந்துள்ளார். இந்த பிரியாணி கூட வேண்டும் என்றே சமைத்துள்ளார். 

இருப்பினும் மாணவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரின் இந்த விதிமீறல் செயல்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக வெறும் அபராதம் மட்டும் விதித்ததாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT