இந்தியா

குஜராத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் காணாமல் போகும்: அனுராக் தாக்கூர்

Raghavendran

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். அந்தக் கட்சியின் இந்த முடிவுதான் காங்கிரஸ் இல்லா பாரதத்தின் துவக்கமாக அமையப்போகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் போது நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றிபெறும்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை ஜனநாயகத்தில் பிரச்னை உள்ளது. இது அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சியின் மீதமுள்ள பலமும் இந்தத் தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிடும். அக்கட்சியில் நிலவி வரும் உள்கட்சிப் பூசல்கள் மட்டுமே இதற்கு முக்கியக் காரணம். 

ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. மாறாக அதளபாதாளம் நோக்கிச் செல்லும். ஜனநாயகமற்ற, எவ்வித கட்டமைப்பு இல்லாத கட்சிதான் காங்கிரஸ்.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு அதன் முக்கியத் தலைவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை விட்டுச் சென்றுவிடுவர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT