இந்தியா

ஜன. 14-இல் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருகை

DIN

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனவரி 14-ஆம் தேதி இந்தியா வருகிறார். 
அன்றைய தினம் குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவேற்க உள்ளார். ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் தில்லியில் அரசு உயரதிகாரிகளை அவர் சந்தித்து கலந்துரையாட உள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான சபாத் இல்லத்துக்கும் அவர் செல்கிறார்.
இதற்கு முன்பு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை குஜராத்தில் பிரதமர் மோடி வரவேற்றிருந்தார்.
இதனிடையே, இந்தியா-இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் ராஜீய ரீதியிலான நல்லுறவு தொடங்கியது. அதன்பிறகு, இஸ்ரேல் தலைவர் ஒருவர் இந்தியா வருகை புரிவது இது இரண்டாவது முறையாகும். 
இதற்கு முன்பு 2003-ஆம் ஆண்டில், அப்போதைய இஸ்ரேல் அதிபர் ஏரியல் ஷரோன் இந்தியா வந்திருந்தார். இதனிடையே, பிரதமர் மோடி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT