இந்தியா

மூன்று மணி நேரத்தில் மூன்று முறை ரயில் பெட்டிகளைப் பிரிந்து தனியாகச் சென்ற எஞ்சின்! 

IANS

லக்னௌ: எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் எஞ்சினானது, இன்று அதிகாலை மூன்று மணி நேரத்தில் மூன்று முறை ரயில் பெட்டிகளைப் பிரிந்து தனியாகச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.     

காஷ்மீரின் ஜம்முவில் இருந்து பிஹாரின் தலைநகர் பாட்னா வரை செல்வது அர்ச்சனா எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயிலானது நேற்று ஜம்முவின் தவி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மாவட்டத்தின் வழியாக அந்த எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தது.

அதிகாலை 02.30 மணி அளவில் சர்சவா நகருக்கு அருகே சென்று கொண்டிருந்த பொழுது ரயிலின் எஞ்சினானது பிற பெட்டிகளிலிருந்து பிரிந்து தனியாகச் செல்லத் துவங்கியது. உடனடியாக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு எஞ்சினை ரயில் பெட்டிகளுடன் பொருத்தினர். பின்னர் 03.17 மணி அளவில் பயணம் தொடர்ந்தது.

ஆனால் அதிகாலை 04.25 மணி அளவில் ரயிலானது பிலக்ஹனி ரயில் நிலையம் அருகே வந்த பொழுது மீண்டும் எஞ்சினானது பிற பெட்டிகளிலிருந்து விடுபட்டது. மறுபடியும் ஊழியர்கள் எஞ்சினை ரயில் பெட்டிகளுடன் பொருத்தினர். 05.10 மணி அளவில் ரயில் புறப்பட்டது.

மறுபடியும் மூன்றாவது முறையாக 05.35 மணி அளவில் எஞ்சினானது பிற பெட்டிகளிலிருந்து விடுபட்டது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக மண்டல முதுநிலை ரயில்வே அதிகாரிகளுடன் பேசி, புதிய எஞ்சின் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

பின்னர் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவங்களில் யாருக்கும்  பாதிப்பு ஏற்படவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT