முகப்பு
இந்தியா

நாட்டின் முன்னேற்றத்திற்காக எந்த விதமான அரசியல் விளைவையும் சந்திக்கத் தயார்: மோடி சூளுரை! 

நாட்டின் முன்னேற்றத்திற்காக எந்த விதமான அரசியல் விளைவையும் சந்திக்கத் தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 30 நவம்பர், 2017 at 2:29 PM
பகிர்:

புதுதில்லி: நாட்டின் முன்னேற்றத்திற்காக எந்த விதமான அரசியல் விளைவையும் சந்திக்கத் தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்திய தலைமைப்பண்பு தொடர்பான கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கருதரங்கத்தினை துவக்கி வைத்து அவர் பேசியதாவது

எனது அரசானது வளர்ச்சியையும் குடிமக்களையும் மையப்படுத்திய, ஊழல் அற்ற ஒரு சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

Advertisement

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இணைப் பொருளாதாராமாகவே விளங்கி வந்த கருப்பு பணமானது தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது.

அதன் பிறகு திரட்டப்பட்ட தகவல்களானது ஊழலில் ஈடுபடுவோரை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. 

ஆதார் எண் பயன்படுத்துதல் மூலமாக பினாமி பெயர்களில் பதுக்கப்படும் சொத்துக்களினைக் கண்டறிய இயலும்.

இவ்வாறு மோடி அந்த நிகழ்வில் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.