இந்தியா

ஜிஎஸ்டி கவுன்சில் இன்று கூடுகிறது

DIN

சரக்கு சேவை வரிவிதிப்பை நிர்ணயிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை பயக்கும் சில முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இது ஜிஎஸ்டி கவுன்சிலின் 22-ஆவது கூட்டமாகும். பிகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் செயல்பாடு குறித்து எடுத்துக் கூற உள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
அதேபோல், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மத்திய வருவாய்ச் செயலர் ஹஸ்முக் அதியா தலைமையிலான குழு, தனது முதல் கட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஏற்றுமதியாளர்களுக்கான சில விதிமுறைகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
மேலும், ஏற்றுமதியாளர்களிடம் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரித்தொகை வரும் 10-ஆம் தேதி முதல் திருப்பித் தரத் தயாராக இருப்பதாக மத்திய சுங்க, கலால் வரி வாரியம், ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்றுமதியாளர்கள் தங்கள் வருவாய் தொடர்பான கணக்குகளை மாதம்தோறும் தாக்கல் செய்வதற்குப் பதிலாக காலாண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய அனுமதிப்பது போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT