இந்தியா

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக குறையும்: உலக வங்கி கணிப்பு

DIN

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழாண்டில் 7 சதவீதமாக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
முன்னதாக, இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழாண்டில் 6.7 சதவீதமாக குறையும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்திருந்த நிலையில், உலக வங்கியும் அதுபோன்ற கணிப்பை வெளியிட்டுள்ளது.
தெற்கு ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார நிலவரம் தொடர்பாக உலக வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் எழுந்துள்ள பிரச்னைகளால், இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.6 சதவீதமாக இருந்தது. இது, நிகழாண்டில் 7 சதவீதமாக குறையக் கூடும். எனினும், அரசின் திட்ட செலவுகளையும், தனியார் முதலீடுகளையும் சமநிலையுடன் சிறப்பாகக் கையாளும் வகையிலான கொள்கைகளை செயல்படுத்தினால், அடுத்த ஆண்டுக்குள் வளர்ச்சி விகிதத்தை 7.3 சதவீதமாக அதிகரிக்க முடியும். அத்துடன், வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளை திறனுடன் மேற்கொண்டால், இந்தியாவில் நீடித்த வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 7.1 சதவீதமாக சரிந்த நிலையில், நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகித சரிவு, ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது. எனவே, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய வளர்ச்சியை விட அடுத்த இடத்துக்கு தெற்கு ஆசியா பின்தங்கியுள்ளது.
ஜிஎஸ்டி-யால், இந்தியாவில் 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கக் கூடும். ஆனால், அதன்பிறகு வளர்ச்சியின் நகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனியார் முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சுணக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால், 2020-ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT