இந்தியா

விதிமுறைகளை மீறியதாக 22 மீனவர்கள் கைது

DIN

அழிவின் விளிம்பில் இருக்கும் ஆலிவ் ரிட்லி ஆமை உயிரினம் அதிகமாக இனப்பெருக்கம் செய்யும் பகுதியில், தடையை மீறி மீன் பிடித்ததாக மீனவர்கள் 22 பேரை வனத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அந்த வகை ஆமை இனப்பெருக்கம் செய்யும் பகுதி ஒடிஸாவில் உள்ளது. அந்தப் பகுதியில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் அந்த மாநில வனத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, படகுகளில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 பேரும் பாலாசோர் மாவட்டம், பாத்ரக் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT