இந்தியா

தாஜ்மஹல் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம்? சுப்ரமணியன் சுவாமி கொளுத்தும் புதிய வெடிகுண்டுத் திரி! 

DIN

புதுதில்லி: தாஜ்மஹல் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து பாரதிய ஜனதா கட்சி முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள கருத்து புதிதாய் சர்ச்சைகளுக்கு திரி கிள்ளியுள்ளது

இந்திய வரலாற்றில் தாஜ்மஹலுக்கு இடம் இல்லை என்று கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபி பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு, கண்டனங்கள் மற்றும் எதிர் கருத்துக்கள் என தாஜ்மஹல் தொடர் விவாதப் பொருளானது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள கருத்துகள், மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

முகலாய அரசரான ஷாஜஹான், தாஜ்மஹல் தற்பொழுது அமைந்துள்ள இடத்தினை, ஜெய்ப்பூரின் அப்போதைய ராஜாக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக அவர் நாற்பது கிராமங்களை ஜெய்ப்பூர் ராஜாக்களுக்கு வழங்கியுள்ளார். ஆனால் அவை ஒருபோதும் தாஜ்மஹல் அமைந்துள்ள நில மதிப்புக்கு ஒரு பொழுதும் ஈடாகாது.

இது தொடர்பான ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன. அவற்றை உரிய சமயத்தில் ஊடகங்களிடம் வெளியிடுவேன். அந்த ஆவணங்களின் வாயிலாக அங்கு முன்னர் ஒரு கோவில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆனால் அந்த கோவில் இடிக்கப்பட்ட பின்னர்தான் அங்கு தாஜ்மஹல் கட்டப்பட்ட தா என்பது குறித்து தெரியவில்லை.

தாஜ்மஹலை இடிக்க வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் இல்லை. ஆனால் இஸ்லாமியர்கள் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட நாற்பதாயிரத்துக்கும் மேலான கோவில்களில் மூன்று கோவில்கள் மட்டுமே மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அயோத்தியில் ராமர் கோவில்,  மதுராவில் கிருஷ்ணர் கோவில் மற்றும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய மூன்றினை மட்டுமே நாங்கள் கட்ட விரும்புகிறோம்.

இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT