இந்தியா

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பின் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் வெங்கய்ய நாயுடு

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சனிக்கிழமை வீடு திரும்பினார்.
68 வயதாகும் வெங்கய்ய நாயுடு, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முழு அளவிலான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்போது, அவரது இதய ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு, ரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்வதற்காக ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டது. இதய நோய்கள் துறை மூத்த மருத்துவர் பல்ராம் பார்கவா தலைமையிலான மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். சிகிச்சைக்குப் பின், அவரது உடல் நிலை சீராக உள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார். அடுத்த 3 நாள்களுக்கு அவர் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நாள்களில் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அந்த மருத்துவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT