இந்தியா

காஷ்மீர் இளைஞர்களிடையே பயங்கரவாதம் பரப்பப்படுவதை கவனமாக சமாளிக்கிறோம்: ராணுவத் தளபதி விபின் ராவத்

DIN

ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்களிடையே பயங்கரவாதம் பரப்பப்படுவதை மிகவும் கவனத்துடன் எதிர்கொண்டு சமாளிப்பதாக ராணுவத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.
அவர், ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை, ஜம்மு நகருக்கு வந்திருந்தார். அங்கு ராணுவத்தின் "47 ஆர்மர்டு ரெஜிமெண்ட்' என்ற ஆயுதப் படைப் பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் விருதுகளை, ராம்நாத் கோவிந்த் சார்பில் ராவத் வழங்கினார். இப்படைப் பிரிவினரின் சிறப்பான சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களிடையே பயங்கரவாதம் பரப்பப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து ராவத் கூறியதாவது:
காஷ்மீரில் பயங்கரவாதம் பரப்பப்படுகிறது. இது உலக அளவில் நடைபெறும் விஷயமாகும். காஷ்மீரில் இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் கவனமாகக் கையாண்டு சமாளிக்கிறோம். பயங்கரவாதத்தின் பால் மக்கள் ஈர்க்கப்படாமல் இருப்பதைஉஉறுதிப்படுத்த நாங்கள் முயன்று வருகிறோம். சமூக ஊடகங்கள் காரணமாகவே பயங்கரவாதக் கருத்துகள் பரப்பப்படுவது நடைபெறுகிறது.
கூந்தல் கத்தரிப்பு சம்பவங்களால் காஷ்மீரில் வன்முறை மிகுந்த போராட்டங்கள் வெடித்தது குறித்தும் இதனால் அரசுக்கு சவால் ஏற்பட்டுள்ளதா என்றும் கேட்கிறீர்கள். இதை ஏன் நீங்கள் (செய்தியாளர்கள்) சவாலாகப் பார்க்கிறீர்கள்? நாட்டின் மற்ற பகுதிகளிலும் கூந்தல் கத்தரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது இது காஷ்மீரில் நடக்க ஆரம்பித்துள்ளது.
இதை நாங்கள் சவாலாகப் பார்க்கவில்லை. இந்த விவகாரம் வழக்கமான ஒன்றுதான். இது தொடர்பாக அரசு நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கூந்தல் கத்தரிப்பு முயற்சிகள் முறியடிக்கப்படும்.
காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்த இந்த விவகாரத்தை பிரிவினைûவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களா? என்று கேட்கிறீர்கள். இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக் கொணர்வதில் ஊடகங்களுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது என்றார் ராவத்.
காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளைக் கட்டுப்படுத்தவும், கல்வீசும் நபர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுமே என்ஐஏ அதிரடிச் சோதனைகளை நடத்தியதா? என்ற கேள்விக்கு, காஷ்மீரில் மத்திய அரசின் அணுகுமுறையே பின்பற்றப்படுகிறது. என்ஐஏ நடத்திய அதிரடிச் சோதனையால் என்ன சாதிக்கப்பட்டது என்பது விரைவில் தெரிய வரும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT