இந்தியா

விரைவில் உயரப்போகிறது இந்தியாவில் இணைய சேவையின் குறைந்தபட்ச வேகம்!

DIN

புதுதில்லி: இந்தியாவில் இணையத்தின் குறைந்தபட்ச வேகம் தற்போதுள்ள 512 கேபிபிஎஸ் என்னும் அளவில் இருந்து 2 எம்பிபிஎஸ் அளவுக்கு விரைவில் உயரப் போவதாக தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தித்தாள் ஒன்றுக்கு தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் தொலை தொடர்புத் துறை நிறுவனங்கள் தங்களுடைய 3G மற்றும் 4G சேவை விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ள அளவுக்கு நெருக்கமாக கூட இணைய சேவையின் வேகம் இருப்பதில்லை.  இந்நிலையில் நாம் விரைவில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறோம். உண்மையில் நமது இணைய சேவையின் குறைந்தபட்ச வேகம் என்பது மிகவும் குறைவு. தேவைப்படும் அளவுக்கான சேவைகளை நம்மால் வழங்க முடிவதில்லை.

நாடு கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் பொருளாதார மயத்துக்கு மாறி வரும் சூழ்நிலையில் இந்தியாவின் இந்தியாவில் இணைய சேவையின் வேகத்தினை அதிகரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே இந்தியாவில் இணையத்தின் குறைந்தபட்ச வேகம் தற்போதுள்ள 512 கேபிபிஎஸ் என்னும் அளவில் இருந்து 2 எம்பிபிஎஸ் அளவுக்கு விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படையாகும். இதனை விடக் கூடுதலாக கூட குறைந்தபட்ச அடிப்படை வேகம் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இதனை விடக் குறையாது.

இவ்வாறு அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இணைய சேவையின் வேகம் குறைவாக இருப்பதற்கான பல்வேறு காரணிகள் குறித்தும், அதனை சரிபடுத்துவதில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் பங்கு குறித்தும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான 'டிராய்' சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT