இந்தியா

செயற்கை குளத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்த மஹாராஷ்டிர முதல்வர்!

செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட குளத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்தார் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

DIN

நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி விழா ஆகஸ்ட் 25-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் விருப்ப கடவுளாக மட்டும் இன்றி பலரது பிடித்த தெய்வமாக விநாயகர் உள்ளார்.

எனவே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு வண்ணங்களிலும் விநாயகர் சிலைகளை வடிவமைத்து நாடு முழுவதிலும் அனைவரும் கொண்டாடினர்.

இதையடுத்து, விநாயகர் சிலை விசர்ஜனம் அனைத்து இடங்களிலும் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வது வழக்கம். அவ்வைகையில் கடல், குளம் உள்ளிட்ட இடங்களில் விசர்ஜனம் நடைபெற்றது.

இந்நிலையில், செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட குளத்தில் விநாயகர் சிலையை செவ்வாய்கிழமை விசர்ஜனம் செய்தார் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ். 

ஒருபுறம் மும்பை மாநகரம் வெள்ளத்தால் அவதிப்பட்டு வந்தாலும், மறுபுறம் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவும் அவதிப்படுகிறது.

மும்பை மாநகரில் செவ்வாய்கிழமை விநாயகர் சிலை விசர்ஜன நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து மும்பை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

சர்வாஜனிக் பகுதியில் 80, கர்குட்டி பகுதியில் 3,607 மற்றும் கௌரி பகுதியில் 30 என செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட குளங்களில் மொத்தம் 3,742 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT