இந்தியா

'நீட்' போராட்டங்களுக்குத் தடை கோரும் மனு மீது இன்று விசாரணை

DIN

நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரும் பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம் 8) விசாரிக்க உள்ளது. 
இது தொடர்பாக வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், 'நீட்' தேர்வு தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மாநில அரசு அனுமதிக்கக் கூடாது எனவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) இணையாக, மாநில அரசின் பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புக்களுக்கானப் பாடத் திட்டத்தை மேம்படுத்தவும், தலித் மாணவி எஸ். அனிதாவின் தற்கொலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு குழு அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை விசாரிக்கும் வழக்குப் பட்டியலில் 81-ஆவது வழக்காக இடம் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT