இந்தியா

மத்திய அமைச்சரவைக் குழுக்கள் மாற்றியமைப்பு: நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயலுக்கு முக்கியத்துவம்

DIN

மத்திய அமைச்சரவையின் முக்கியக் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் நிர்மலா சீதாராமன் சேர்க்கப்பட்டுள்ளார். 
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஏற்கெனவே இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல் விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழு, பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழு ஆகியவற்றிலும் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளார். 
மத்திய ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயலுக்கும் இந்த இரு அமைச்சரவைக் குழுக்களிலும் இடமளிக்கப்பட்டுள்ளது. 
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
எம்.பி.க்களுக்கு தில்லியில் வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவது தொடர்பான அமைச்சரவைக் குழுவில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி இடம் பெற்றுள்ளார்.
இணையமைச்சராக இருந்து கேபினட் அமைச்சர் அந்தஸ்து பெற்ற முக்தார் அப்பாஸ் நக்வி, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
அவருக்கு பதிலாக நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் விஜய் கோயல் அக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். 
மத்திய அமைச்சர் உமா பாரதியிடம் இருந்து ஏற்கெனவே நீர் வளத்துறை பறிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சரவைக் குழுவிலும் இடமளிக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT