இந்தியா

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் வழக்கு: இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு அழைப்பாணை

DIN

ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த வழக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்டோருக்கு, தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது.
ஜிசாட் 6, ஜிசாட்6ஏ ஆகிய செயற்கைக்கோள்கள் மூலம் எஸ்-பாண்ட் அலைவரிசைகளை தேவாஸ் மல்டி மீடியா நிறுவனம் பயன்படுத்திக் கொள்வதற்கு, அந்நிறுவனத்துடன் இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்
கொண்டது. 
இதில், தேவாஸ் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக் கருவூலத்துக்கு ரூ.578 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அப்போதைய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, மாதவன் நாயர் உள்ளிட்டோருக்கு எதிராக, சிபிஐ கடந்த 2015-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது. தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாதவன் நாயர், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் பாஸ்கர் நாராயண ராவ், ஆன்ட்ரிக்ஸ் முன்னாள் செயல் இயக்குநர் கே.ஆர்.ஸ்ரீதர் மூர்த்தி, விண்வெளித் துறை முன்னாள் கூடுதல் செயலர் வீணா எஸ்.ராவ் உள்ளிட்டோருக்கு, சிறப்பு நீதிபதி வீரேந்தர் குமார் கோயல் சனிக்கிழமை அழைப்பாணை அனுப்பினார். 
அதில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின் அடிப்படையில் மேற்கண்ட உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதியை, உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து பெற்றுவிட்டதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT