இந்தியா

டிஐஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

DIN

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் அதிமுகவின் வி.கே.சசிகலாவுக்கு சிறையில் விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக புகார் அளித்த அந்த மாநில சிறைத் துறையின் முன்னாள் டிஐஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
மெச்சத்தக்க வகையில் அவர் பணியாற்றி வருவதற்காக இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்தப் பதக்கத்தை ரூபாவிடம் அந்த மாநில ஆளுநர் வஜுபாய் வாலா அளித்தார். நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் சித்தராமய்யா, மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூபாவுடன் மேலும் சில காவல் துறை உயரதிகாரிகளுக்கும்
குடியரசுத் தலைவர் பதக்கம் அளிக்கப்பட்டது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசிடம் ரூபா புகார் அளித்தார்.
சிறப்பு வசதிகளை அவருக்கு செய்துதருவதற்காக சிறைத் துறை டிஜி ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவரது அதிரடியான அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, டிஐஜி ரூபாவை பெங்களூரு சாலைப் போக்குவரத்து, சாலைப் பாதுகாப்புத் துறையின் ஆணையராக துறை மாற்றம் செய்தது கர்நாடக அரசு. சிறைத் துறை டிஜியும் வேறு துறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT