இந்தியா

"தூய்மையே சேவை' திட்டம்: வாராணசியில் இன்று தொடங்குகிறார் யோகி ஆதித்யநாத்

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "தூய்மையே சேவை' திட்டத்தை, அந்த மாநிலத்தின் வாராணசி நகரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை (செப்.17) தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட அம்சங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், "தூய்மையே சேவை' என்ற திட்டத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில பாஜக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "தூய்மையே சேவை' திட்டம், அனைத்து மக்களையும் சென்றடையச் செய்யும் வகையில், வாராணசியில் அந்தத் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார்.
மேலும், இந்தத் திட்டத்தை பாஜகவின் மாநிலத் தலைவர் மகேந்திர நாத் பாண்டே காஸியாபாதில் தொடங்கி வைக்கிறார். இதுமட்டுமன்றி, தூய்மை என்பதை ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் ஓர் அங்கமாக இடம்பெறச் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் முறையே பரேலி மற்றும் ஜான்சியில் "தூய்மையே சேவை' திட்டத்தைத் தொடங்கவிருப்பதாக மாநில பாஜக துணைத் தலைவர் ஜே.பி.எஸ். ராத்தோர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT