இந்தியா

குறைந்தபட்ச ஊதியம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் நல்ல செய்தி கிடைக்கலாம்!

DIN


புது தில்லி: சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் முடிவை ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஊதிய உயர்வு என்பது வரும் ஜனவரி மாதத்தில் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட் ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

7வது ஊதிய குழு அளித்த பரிந்துரைகளை, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டு சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதிருக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, தங்களது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர்களின் பல நாள் கோரிக்கை. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையான 14.27 சதவீத அடிப்படை ஊதிய உயர்வு என்பது, கடந்த 70 ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஊதிய உயர்விலேயே மிகவும் குறைவான ஒன்றாகும்.

தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் என்பது 18 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இதனை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குறைந்தபட்ச மாத ஊதியத்தை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு ரூ.21 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்து அடுத்த வாரம் மிக முக்கிய கூட்டம் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT