இந்தியா

குவைத்தில் 15 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: சுஷ்மா தகவல்

DIN


புது தில்லி: குவைத்தில் 15 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தியர்கள் 15 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைந்த குவைத் மன்னருக்கு நன்றி.

அதோடு, குவைத் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 119 இந்தியர்களின் தண்டனையையும் அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. இதற்காக அந்நாட்டு மன்னருக்கு இந்தியா சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க சட்ட உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT