இந்தியா

செல்ஃபி விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள் எவை? மாநிலங்களிடம் பட்டியல் கேட்கும் மத்திய அரசு

சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நடந்த பகுதிகள் எவை எவை என்று பட்டியல் தருமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

PTI


புது தில்லி: சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நடந்த பகுதிகள் எவை எவை என்று பட்டியல் தருமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

செல்ஃபி எடுக்கும் போது அதிகமான விபத்துகள் நேரிட்டதை அடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், செல்ஃபி எடுக்கும் போது அதிக விபத்துகள் நேரிடும் பகுதியை 'நோ செல்ஃபி ஸோன்' (சுய படம் எடுக்கக் கூடாத பகுதிகள்) என்று அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், செல்ஃபி எடுக்கும் போது விபத்து நடக்கும் பகுதிகளில், அபாயப் பலகை அல்லது அறிவிப்புப் பலகைகளை வைக்குமாறும், பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் மாநில  அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

SCROLL FOR NEXT