இந்தியா

மேகலாயா முதல்வரின் பாதுகாப்பு வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! 

மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மாவின் பாதுகாப்பு வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

இம்பால்: மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மாவின் பாதுகாப்பு வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மா. அவரது பாதுகாப்பு வீரர்கள் அணியில் சாந்திகுமார் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் இம்பாலில் உள்ள 'கிளாசிக் கிராண்ட்' என்னும் ஓட்டலில் ஞாயிறு அதிகாலை 3.15 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் காந்தி

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT