போர்ட் பிளேர்: ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையர்கள் பணத்தை திருடுவதாக அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் முறையில் நடைபெறும் இந்த கொள்ளையில் ஏராளமானோர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை இழந்திருப்பதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் காவல்துறை எச்சரித்துள்ளது.
தில்லி உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களின் ஏடிஎம் கார்டுகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், ஏராளமானோர் இது குறித்து தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கொள்ளையில், வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் அட்டையை யாரிடமும் கொடுக்காத பட்சத்திலும், குறிப்பிட்ட இந்த வங்கிதான் என்று சொல்ல முடியாத வகையில் பல வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளிலும் இந்த மோசடி நடந்துள்ளதாக அந்தமான் நிக்கோபார் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக தங்களது ஏடிஎம் பின் எண்ணை மாற்றுமாறும், தங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டால், அடுத்த 3 நாட்களுக்குள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக அந்தமான் நிக்கோபார் இருந்து வருகிறது. ஆனால், இதுவரை பல்வேறு நூதன வழிகளை பின்பற்றி ஏடிஎம் பின் எண்களை கண்டுபிடித்து பணம் கொள்ளையடிக்கப்படுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏடிஎம் அட்டை திருடப்படும். இந்த முறை அதிலும் ஒரு மாற்றம், ஏடிஎம் அட்டையை திருடாமலேயே பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.