இந்தியா

பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்: ராகுல்

DIN

நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் வேலை கேட்டு சென்ற 17 வயது இளம்பெண்ணை பாஜக எம்எல்ஏ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் சிறு மி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 
இந்த 2 சம்பவங்களை முன்வைத்து, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, 2 சம்பவங்களிலும் குற்றம் செய்த நபர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், நாட்டின் மகள்களான அந்த 2 பேருக்கும் நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கருத்து குறித்து சுட்டுரை சமூகவலைதளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 19,675 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2016ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இது வெட்கக் கேடானது ஆகும்.
இந்த வழக்குகளை விரைவுப்படுத்தவும், குற்றம்சாட்டப்பட்டோரை கடுமையாக தண்டிக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் மகள்களுக்கு நீதி அளிப்பதில் அவர் உறுதியாக இருந்தால், இந்நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT