இந்தியா

பிரிட்டன், ஸ்வீடன் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் மோடி

DIN

ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக, ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
முதல் கட்டமாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீஃபன் லோஃபெனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தியா-நார்டிக் நாடுகளின் (டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன்) மாநாட்டிலும் மோடி பங்கேற்கிறார். பிறகு ஸ்வீடன் அரசரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மாலை பிரிட்டன் செல்கிறார். அங்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசி எலிசபெத்தையும் மோடி சந்தித்துப் பேசுகிறார். அப்போது, சர்வதேச சூரியமின்சக்தி கூட்டமைப்பில் புதிதாக இணைந்துள்ள பிரிட்டனை மோடி வரவேற்கவுள்ளார். லண்டனில் ஆயுர்வேத சிறப்புச் சிகிச்சை மையத்தையும் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
பிரிட்டன் பயணத்தின் முக்கிய அம்சமாக, லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் மோடி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாடு, வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தாயகம் திரும்புகிறார். வரும் வழியில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலைச் சந்தித்துப்பேசவுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT