இந்தியா

மோடி அரசு வங்கி அமைப்பை சீரழித்தது தான் பணத் தட்டுப்பாட்டுக்கு காரணம்: ராகுல் விமரிசனம்

Raghavendran

நாட்டின் சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணத்தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடி வங்கி அமைப்பை சீரழித்தது தான் முக்கிய காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.

இந்தியாவில், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பிகார், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதுகுறித்து கூறுகையில், நாட்டில் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளேன். வங்கிகளிலும் போதுமான அளவுக்கு பணப்புழக்கம் கையிருப்பில் இருக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அதிக அளவிலான 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், இவ்விவகாரம் தொடர்பாக கூறியதாவது:

நாட்டின் வங்கி அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்துவிட்டார். அதுதான் இந்த திடீர் பணத்தட்டுப்பாட்டுக்கு மிக முக்கிய காரணமாகும். முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் நாம் தான் வங்கி வாயில்களில் வரிசையில் நிற்க வைக்கப்பட்டோம். மாறாக அவற்றை நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலான அரசமைப்பு தான் தற்போது நம்மிடம் உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT