இந்தியா

அதிகரிக்கும் வங்கி ஊழல்கள்: ரிசர்வ் வங்கி ஆளுநரை விசாரிக்க பாராளுமன்ற குழு முடிவு! 

PTI

புதுதில்லி: அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கோடிக்கணக்கான அளவில் பண முறைகேடு நடப்பது தொடர்கதையாகி விட்டது. பி.என்.பி வங்கி மற்றும் தற்பொழுது ஐசிஐசிஐ என இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில் தான் அதிகரித்து வரும் வங்கி ஊழல்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரை நேரில் அழைத்து விசாரிக்க பாராளுமன்ற நிலைக் குழு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி  தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு கூட்டம் கூடி, செவ்வாயன்று நிதித்துறை செயலர் ராஜிவ் குமாரிடம் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அது தொடர்பாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

நிதி விவகாரங்களுக்கான பாராளமன்ற நிலைக்குழு முன்பு வரும் மே  17 அன்று ஆஜராகுமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் வங்கி ஊழல்கள் தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பவுள்தாகத் தெரிகிறது.

அத்துடன் இத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு என்ன விதமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT