இந்தியா

பணமதிப்பிழப்பு பேய் அரசையும், ஆர்பிஐ-யையும் ஆட்டிப்படைக்கிறது: ப.சிதம்பரம்

Raghavendran

சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள திடீர் பணத்தட்டுப்பாடு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமரிசித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பொதுமக்கள் வங்கிகளில் இருந்து தங்களின் பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் வங்கி கணக்குகளில் பணம் செலுத்துவது குறைந்துவிட்டது. வங்கி அமைப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்திதான் இதற்கு முக்கிய காரணம். இதற்கு வங்கி ஊழல்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். 

பணப் பதுக்கலை ஒழிப்பதாகக் கூறித்தான் மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1,000 பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் தற்போது இதே அரசாங்கம்தான் ரூ.2,000 நோட்டுகள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதே பதுக்குவதற்குத்தான்.

இதனால் தற்போது பணமதிப்பிழப்பு பேய் மத்திய அரசையும், ஆர்பிஐ-யையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 17 மாதங்களாகியும் ஏடிஎம் இயந்திரங்கள் ஏன் இன்னும் நவீனப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT