முகப்பு
இந்தியா

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை! 

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:49 PM
பகிர்:

மும்பை: மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்ட வனப்பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது மறைந்து இருந்த நக்சலைட்கள் போலீசார் மீது அதிரடியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இருதரப்பு இடையே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 13 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →