இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரித்தது ஏன்? வெங்கய்ய நாயுடு விளக்கம்

DIN


புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு இன்று நிராகரித்தார்.

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதாலேயே, எதிர்க்கட்சிகள் அளித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ் குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் சாசன வல்லுநர்களுடன் கலந்தாலோசனை  செய்த பிறகே, நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் நோட்டீஸ் அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT