இந்தியா

ராகுல் சந்திப்பு, எய்ம்ஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல், காவலர்களுடன் வாக்குவாதம்: லாலு டிஸ்சார்ஜில் அமளி

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ராஞ்சி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.

Raghavendran

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ராஞ்சி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டார்.

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:

எந்த வசதியும் இல்லாத மருத்துவமனைக்கு என்னை மாற்றியுள்ளனர். வேண்டுமென்றே திட்டமிட்டு எனது உடல்நலத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை. இது ஒரு கடினமான காலம். இருப்பினும் இதை நான் எதிர்கொள்வேன் என்றார்.

இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு பிராசத் யாதவ் மாற்றப்படும் போது அவர் அங்கிருந்த காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகிகள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லாலு பிரசாத் யாதவ் டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மர்ம நபர்கள் எங்கள் நிர்வாகிகளை தாக்கியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தில்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என்றிருந்தது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை காலை நேரில் சென்று லாலு பிராசத் யாதவ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT