இந்தியா

தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்: ஜோதிபாசுவைத் தாண்டிய ஜோரான பயணம் 

DIN

கேங்டாக்: இந்தியாவில் தொடர்ந்து அதிக காலம் பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர் என்ற சாதனையை சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் ஏற்படுத்தியுள்ளார்.   

சிக்கிம் மாநில முதல்வராக பதவி வகித்து வருபவர் பவன் குமார் சாம்லிங் (63). தனது 32 வயதில் அரசியலில் ஈடுபட்ட அவர் அன்று துவங்கி இன்றுவரை மக்கள் விரும்பும் தலைவராக வலம் வருகிறார். அம்மாநில முதல்வராக 1989-ம் ஆண்டு நர் பகதூர் பண்டாரி பதவி வகித்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார் சாம்லிங்.

பின்னர் 1993ம் ஆண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி என்ற தனி கட்சி் தொடங்கினார். 1994ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று சிக்கிம் மாநில முதல்வர் பதவியில் அமர்ந்தார். அன்று முதல் சிக்கிம் மக்களின் மனம் கவர்ந்த தலைவராகவும், மக்கள் முதல்வராகவும் விளங்கி வருகிறார். தொடர்ந்து ஐந்து முறை தேர்தலில் வென்று முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார்.

அவரது நடவடிக்கைகள் யாவும் மக்கள் நலனை முன்னிறுத்தியே இருப்பதால் தொடர்ந்து முதல்வர் பதவியில் அமர்ந்து வருவதுடன், எந்த ஒரு எதிர்கட்சியும் அவரை அசைக்க முடியவில்லை. கடந்த 2014ம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலும் கூட மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சி அமைத்தார்.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து அதிக காலம் பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர் என்ற சாதனையை சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் ஏற்படுத்தியுள்ளார்.   

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 29) அன்று அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக மேற்குவங்க மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதி பாசு 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவியில் அமர்ந்து சாதனை படைத்தார்.

1977ம் ஆண்டு மேற்குவங்க முதல்வராக பதவியில் அமர்ந்த ஜோதி பாசு, 2000மாவது ஆண்டில் பதவியை, புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம் ஒப்படைத்து விட்டு விலகினார். அவரது இந்த சாதனையே தொடர்ச்சியாக நீண்டகாலம் பதவி வகித்த முதல்வர் என்ற பெருமையை கொண்டதாக இருந்தது.

தற்பொழுது அந்த சாதனையை ஏப்ரல் 29 -ம் தேதியுடன் முதல்வராக தன்னுடைய பணிக்காலத்தில் 8,539 நாட்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் அதிக நாட்கள் ஒரு மாநிலத்தின் முதல்வராகாப் பதவி வகித்தவர் என்ற சாதனையை சாம்லிங் நிகழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT