இந்தியா

சட்டப்பிரிவு 35ஏ நீக்கப்பட்டால் ஜம்மு-காஷ்மீரின் நிலை என்ன? ஒமர் அப்துல்லா கேள்வி

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் ஜம்மு-காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவியது. எனவே, 1954-ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 

ENS

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் ஜம்மு-காஷ்மீரில் அமைதியற்ற சூழல் நிலவியது. எனவே, 1954-ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 

இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 370க்கு ஏற்ப, 35ஏ என்ற பிரிவு 1954-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சட்டத்தில் 35ஏ பிரிவை சேர்ப்பதற்கு உத்தரவிட்டார். இந்த அரசியல் சாசன பிரிவு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதற்கான வரையறையை உருவாக்கும் அதிகாரத்தை அம்மாநில சட்டப்பேரவைக்கு அளிக்கிறது. 

இந்த சட்டப்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கிறது. 

காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாது. பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில், அசையாச் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ, நிரந்தரமாக குடியேறவோ அல்லது அரசாங்க வேலைகள் பெறவோ முடியாது. இதனை எதிர்த்து அரசு சார்பாற்ற 'வி தி சிட்டிசன்ஸ்' என்ற அமைப்பு, உட்பட 30க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,

சட்டப்பிரிவு 35ஏ-வை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இந்திய அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு தான் ஜம்மு-காஷ்மீர் இருக்கும் என்பதை மறைமுகமாக ஆதரிப்பதுதான். ஒருவேளை அது நீக்கப்பட்டால் அல்லது கலைக்கப்பட்டால் மாநிலத்தின் நிலை என்னவாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT