இந்தியா

பாலியல் குற்றங்களுக்கு எதிராக மௌனம் காக்கும் பிரதமர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து பிரதமர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

தினமணி

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக தொடக்கவிழாவில் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, 

"பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுவது குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. தற்போது இந்தியாவில் இருக்கும் அனைத்து பெண்களும் இந்த விவகாரங்களில் பிரதமர் ஏன் மௌனம் காத்து வருகிறார் என்று வியப்புடன் பார்க்கின்றனர். 

போர் விமான ஒப்பந்தம் குறித்து மக்களிடம் ஏன் பொய் கூறினீர்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால், எனது கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. பிரதமரிடம் கேட்டபோது, அவரால் எனது கண்களை பார்க்க முடியவில்லை. அவர் அப்போது அங்கும் இங்குமாக பார்க்கிறார். ஏனென்றால், காவல் காக்க வேண்டிய நபரே  இந்த முறைகேடில் ஈடுபட்டுள்ளார். 

போர் விமான ஒப்பந்தத்தின் விலை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்ததை விட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், போர் விமானத்துக்கான ஒப்பந்தம் ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் கடந்த காலத்தில் எந்த விமானத்தையும் தயாரித்ததே கிடையாது. அதுமட்டுமின்றி அந்த நிறுவனம் 45,000 கோடி வரை கடனிலும் இருந்துள்ளது" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT