இந்தியா

எந்த எதிர்ப்புகளுக்கும் அஞ்சாதவர் வாஜ்பாய்: இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

DIN

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-க்கு, தில்லியில் அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவின் உயிராக வாஜ்பாய் விளங்கினார். இந்தியர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தனது இளமைப் பருவத்திலேயே முடிவு செய்து விட்டார். இந்தியாவில் ஒரேயொரு கட்சியின் சாம்ராஜ்ஜியம் நிலைத்திருந்த வேளையில் தனது அரசியல் பயணத்தை துவக்கியவர். பல வருடங்கள் எதிர்கட்சியாக திறம்பட செயலாற்றியவர். தனது கொள்கையில் இருந்து எப்போதும், எந்த கடினமான நேரங்களிலும் விலகாதவர். அவர் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தவர். நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தை மதித்தவர்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிர்ப்பு வலுக்கும்போது எல்லாம் அதை திறம்பட எதிர்கொண்டவர் வாஜ்பாய். இவ்விவகாரத்தில் அவரின் சரியான நடவடிக்கைகளால் தான் பயங்கரவாதத்தை வளர்ப்பவர்களின் உண்மை முகம் வெளியே தெரிந்தது. அதுபோல உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு வலுக்க காரணமாக இருந்தவரும் வாஜ்பாய் தான்.

வாஜ்பாய் அவர்களின் தீவிர முயற்சியால் தான் சர்வதேச அரங்கில் இந்தியா அணுஆயுத வல்லமை பெற்ற நாடாக மாறியது. பலதரப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் இரு தினங்களின் இடைவேளையில் அடுத்தடுத்து ஆணுஆயுத சோதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்தது அவரது துணிவு மற்றும் தலைமையை வெளிக்காட்டுகிறது.

எந்த எதிர்ப்புகளுக்கும் அடிபணியாத காரணத்தால் தான் அவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT