இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை முஸ்லீம்களும் விரும்புகின்றனர்: உ.பி. துணை முதல்வர் தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை பெரும்பாலான முஸ்லீம்களும் விரும்புவதாக உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, செவ்வாய்கிழமை தெரிவித்தார். 

ANI

அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை பெரும்பாலான முஸ்லீம்களும் விரும்புவதாக உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, செவ்வாய்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிற ராம பக்தர்களைப் போன்று, அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் அமைய வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட விருப்பமும். தற்போதைய சூழலில் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தீர்ப்புக்காக நாங்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ராமர் கோயில் அமைவதற்கு பாஜக எப்போதும் துணை நிற்கும். இதில் எவ்வித அரசியலும் இல்லை. மாறாக இது எங்களுடைய நம்பிக்கை ஆகும்.

இதுதொடர்பாக சட்ட தீர்மானம் நிறைவேற்ற மக்களவையில் எங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பினும், மாநிலங்களவையில் கிடையாது. மேலும் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை பெரும்பாலான முஸ்லீம்களும் விரும்புகின்றனர். ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் இதுதொடர்பான வழக்கு விவகாரங்கள் சுமூகமாக முடிவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை காங்கிரஸ் முற்றிலும் விரும்பவில்லை.

இவ்வழக்கு தொடர்பான விவகாரம் எளிதில் முடிவதை தான் அனைவரும் விரும்புகின்றனர். தீர்ப்பு வெளியிடுவதில் தாமதம் இருந்தாலும், பேச்சுவார்த்தை அல்லது நாடாளுமன்றத்தில் சட்ட தீர்மானம் நிறைவேற்றி இதை எளிதில் முடிக்க வேண்டும். ராமர் கோயில் மிக விரைவில் அமைக்கப்படும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT