இந்தியா

உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்பட்ட விமானம்: இந்தியாவிலேயே முதன்முறை 

DNS

புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று உயிரி (பயோ) எரிபொருள் மூலம்  திங்கள்கிழமையன்று இயக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருள் கழிவுகளில் இருந்து எத்தனால் எடுக்கப்பட்டு அதன்மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

நமது நாட்டில் முதல்முறையாக டேராடூனில் இருந்து தில்லிக்கு உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின், 78 இருக்கைகள் கொண்ட பாம்பாா்டியா் க்யூ400 ரக விமானத்தில் 75 சதவீதம் வழக்கமான விமான எரிபொருளுடன், 25 சதவீதம் உயிரி எரிபொருள் நிரப்பப்பட்டது.

இந்த விமானத்தில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம், ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் அதிகாரிகள் என 20 போ் பயணித்தனா். டேராடூனில் இருந்து கிளம்பிய விமானம் 25 நிமிடங்களில் தில்லியில் தரையிறங்கியது. இதன் மூலம் இந்தியாவில் உயிரி எரிபொருள் மூலம் விமானத்தை இயக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.

தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானத்தை மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, சுரேஷ் பிரபு, தா்மேந்திர பிரதான், ஹா்ஷ் வா்த்தன், ஜெயந்த் சின்ஹா ஆகியோா் வரவேற்றறனா். அமைச்சா்கள் அனைவரும் இந்த சாதனையைப் பாராட்டி தங்கள் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனா்.

இது தொடா்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவா் அஜய் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருளுக்கான செலவு குறைறவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடும் பெருமளவில் தடுக்கப்படும். இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் செலவு பாதியாகக் குறையும். இதனால் பயணிகள் கட்டணத்தையும் குறைக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட உயிரி எரிபொருளை டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆா்-இந்திய பெட்ரோலிய ஆய்வு நிறுவனம் தயாரித்தது.

கடந்த ஜனவரி மாதம் உலகின் முதல் உயிரி எரிபொருள் விமானம் அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தது. இப்போது, இந்தியாவில் அந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இதுவரை விமானத்தில் உயிரி எரிபொருளை பயன்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT