இந்தியா

புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுக்கு ஆளுநர் வைக்கும் 'பரீட்சை' 

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் சார்ந்த துறை ரீதியான சட்ட விவரங்கள் தொடர்பாக தேர்வு நடத்தப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  நாள்தோறும் துறை வாரியான ஆய்வுகளை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் புதுச்சேரி சமூக நலத்துறையில் அவர் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் சார்ந்த துறை ரீதியான சட்ட விவரங்கள் தொடர்பாக தேர்வு நடத்தப்படும் என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று ஆய்வு முடித்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசு அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் அவர்களின் துறை சார்ந்த சட்ட விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். விரைவில் அதிகாரிகளுக்கு சட்ட விவரம் தொடர்பாக தேர்வு வைக்கபட உள்ளது. 

துறை சார்ந்த சட்டவிதிகளை அதிகாரிகள் கற்று அறிவது அவசியம். குறிப்பாக பல துறைகளிலுள்ள மூத்த அதிகாரிகளுக்கு சட்ட விவரங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். பலர் அதை அறிவதில்லை. இரு வார கால அவகாசம் தந்துள்ளேன். அதற்குள் தேர்வுக்கு அதிகாரிகள் தயாராக வேண்டும். 

அதிகாரிகளுக்கான தேர்வினை எனது தனிச்செயலர் ஸ்ரீதரன் நடத்துவார். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT