இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி: தொடரும் இழுபறி

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத்  தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே பாஜக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது.

DIN

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத்  தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே பாஜக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் இதுவரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் 109 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்தியாவின் இதயமாகத் திகழும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வியும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமைந்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 75 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த மாநிலத்தில் மொத்தம் 2,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து பாஜக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. இப்போது 4-ஆவது முறையாக ஆட்சியை அக்கட்சி தக்க வைக்குமா? என்பது கேள்விக்குறியாகவே மாறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று வாக்கு கணிப்புகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. அதைப் போலவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே காங்கிரஸ் கட்சி குறைந்த இடைவெளியில் முன்னிலை வகித்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 109 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT