இந்தியா

ராஜஸ்தான் தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை; புதிய முதல்வரை ராகுல் தேர்வு செய்வார்

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

DIN


ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தானை ஆளும் பாஜக, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பின்தங்கியுள்ளது.

காங்கிரஸ் 95 இடங்களிலும், பாஜக 80 இடங்களிலும், முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 100 தொகுதிகளில் பெரும்பான்மை வகிக்க வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 95 இடங்களில் முன்னிலை வகிப்பது அக்கட்சிக்கு வெற்றிமுகத்தைக் காட்டுகிறது.

ராஜஸ்தானில் 12 பாஜக அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள் 10 பேர் முன்னிலையில் உள்ளனர். இதர கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.

மொத்தமுள்ள 200 தொகுதிகளில், ஒரு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து 199 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலமான ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இந்த மாநிலத்தில் மொத்தம் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வாக்கு கணிப்புகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்! செய்திகள்:சில வரிகளில் 4.8.25 | Rahul Gandhi | DMK | MKStalin

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

SCROLL FOR NEXT