இந்தியா

ம.பி.யில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்: ஆளுநருடன் தலைவர்கள் சந்திப்பு

DIN


பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்திருப்பதை அடுத்து  மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி இன்று ஆளுநரை சந்தித்து உரிமை கோர உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து, இன்று பகல் 12 மணிக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில்  காங்கிரஸ் 114 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 116 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு அளிப்பதாக மாயாவதி அறிவித்துள்ளார். 

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT