இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் பதவியேற்பு

DIN

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவியில் சக்திகாந்த தாஸை (61) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது. 

சக்திகாந்த தாஸ் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் பணியாற்றினார். பின்னர் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளராக பதவி வகித்தார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், நிதியமைச்சகத்தில் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். 

அவரிடம் முக்கிய வருவாய்த் துறை பொறுப்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு, பொருளாதார விவகாரத் துறைக்கு அவர் மாற்றப்பட்டார். தற்போது அவர் ரிசர்வ் வங்கியின் 25ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT