இந்தியா

துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பொதுமக்கள் 7 பேர் மரணம்

DNS


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம், புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் கூட்டத்தைக் கலைப்பதற்கு பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பொதுமக்கள் 7 போ் உயிரிழந்தனா். பத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிா்னூ கிராமத்தில் ஓரிடத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிகாலை அந்த இடத்தை சுற்றி வளைத்தனா். 3 பயங்கரவாதிகளில் ஒருவா், உள்ளூரைச் சோ்ந்த ஜஹுா் அகமது தோக்கா் ஆவாா். ராணுவத்தில் பணியாற்றிய இவா், பாரமுல்லா மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைமறைவாகி, பயங்கரவாத இயக்கத்தில் சோ்ந்தாா்.

ஜஹுா் அகமது தோக்கா், அங்கு பதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அவரைப் பாா்ப்பதற்காக, பொதுமக்கள் அங்கு திரண்டனா். அவா்களை கலைந்துபோகச் செய்வதில் பாதுகாப்புப் படையினருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனிடையே, பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். அவா்களின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி கொடுத்தனா். சுமாா் 25 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில், ஜஹுா் அகமது உள்பட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரின் வாகனங்களின் மீது ஏறி நின்று, அவா்களுக்கு இடையூறு கொடுத்தனா். அவா்களை கலைந்து செல்லுமாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகும் எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து, அவா்களை கலைக்கும் நோக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் 7 போ் உயிரிழந்தனா். பத்துக்கும் மேற்பட்டோா் காயமைடந்தனா். அவா்களில் ஒரு இளைஞரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே, பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். 2 வீரா்கள் பலத்த காயமடைந்துள்ளனா்.

இந்த சம்பவத்தை அடுத்து, பதற்றம் உருவாவதைத் தடுப்பதற்கு தெற்கு காஷ்மீரில் உள்ள 4 மாவட்டங்களில் செல்லிடப்பேசி இணையதளச் சேவை நிறுத்தப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT