இந்தியா

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு வெறும்.. ஜஸ்ட்..!

DIN

உள்நாட்டுப் பிரச்னைகள் ஆயிரம் இருக்க.. ஊர் ஊராக சுற்றுகிறார் பிரதமர் மோடி என்று ஏராளமானோர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அப்படி ஊர் சுற்ற இதுவரை எவ்வளவு செலவாகியிருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு மே மாதம் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். அந்த நாள் முதல் இன்று வரை 84 உலகப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக மத்திய அரசு செய்திருக்கும் ஒட்டுமொத்த செலவு வெறும் ரூ.2,010 கோடிகள் மட்டுமே.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது மத்திய வெளிவிவகாரத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் நாடாளுமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இதுவரை வணிக ரீதியிலான மற்றும் நல்லுறவு நிலவும் நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பல முறையும், இதுவரை இந்தியத் தலைவர் ஒருவர் செல்லவே செல்லாத நாடுகளுக்கும் சென்று உலகம் சுற்றும் வாலிபர் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்துவிட்டு பிரதமர் மோடி ஜப்பான் சென்றது கடுமையான விமரிசனத்தை எழுப்பியது. இந்த நிலையில், இதுவரை இரண்டு ஆயிரம் கோடி அளவுக்கு உலக நாடுகளின் சுற்றுப்பயணத்துக்கு செலவிடப்பட்டிருப்பது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் பேருந்து கட்டண உயர்வால் பேருந்தில் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வரும் குடிமக்களைக் கொண்ட நாட்டின் தலைவர், இப்படி பல ஆயிரம் கோடிகளை செலவிட்டு உலக நாடுகளுக்குச் சென்று வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்கிறார்கள் ஆர்வலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT