இந்தியா

சஜ்ஜன்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

DIN

சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் சிறை அறிவிக்கப்பட்ட சஜ்ஜன்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். 

கடந்த 1984, அக்டோபர் 31-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப் பாதுகாவலரால் (சீக்கியர்) சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் சீக்கியர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தில்லியில் மட்டும் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சீக்கியப் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டனர். 

இந்தக் கலவரத்துக்கு நீதி கேட்டு சீக்கிய அமைப்புகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. இந்நிலையில், இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் சிறை அறிவிக்கப்பட்ட சஜ்ஜன்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்திக்கு சஜ்ஜன்குமார் சிங் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT