இந்தியா

ஜனநாயகப் படுகொலை செய்யும் காங்கிரஸுக்கு பதிலடி அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி

DIN

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பங்கேற்றார். அப்போது அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். இதில் கட்சியினர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அதில் அவர் பேசியதாவது:

ஜனநாயகப் படுகொலை செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பதிலடியை ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவதன் மூலம் நாம் அளிக்க வேண்டும். தகவல்களும், விழிப்புணர்வுகளுமே ஜனநாயகத்தின் முக்கியமாவையாகும். காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான அரசியல் குறித்த தகவல்களை மக்களிடத்தில் அளித்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வரும். அதன்மூலம் சமுதாயத்தில் மிகப்பெரிய குழப்பத்தையும் ஏற்படுத்தும். மாறாக தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் அதை ஏற்றுக்கொள்வார்கள், அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கமாட்டார்கள்.

நம் நாட்டின் ராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து உயர்மட்ட அமைப்பையும் காங்கிரஸ் கட்சி கொச்சைப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட ரஃபேல் குறித்த தீர்ப்பு காரணமாக உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்பது தான் முக்கிய காரணமாகும். 

தற்போது நீதித்துறையை தங்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்று மிரட்ட முடியாத காரணத்தால் தலைமை நீதிபதிகளை காங்கிரஸ் கட்சி மிரட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT