இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு: ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு  

ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

DIN

புதுதில்லி: ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் நடைபெற்ற அரசியல் ஸ்திரமற்ற தன்மையின் காரணமாக ஆளுநர் பரிந்துரைப்படி கடந்த 6 மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அந்த ஆட்சி புதன் கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில்,  வியாழன் முதல் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பரிந்துரை செய்திருந்தார்.

இதுகுறித்து திங்கட்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர்  தனது பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தது.  

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT