இந்தியா

அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு

அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN


அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தமான் - நிக்கோபர் கடல் பகுதியில் உள்ள ரோஸ், நையில் மற்றும் ஹேவ்லாக் ஆகிய தீவுகளின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளை பெரும்பாலும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவுக்கு ஷகீத் தீப் தீவு என்றும், ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீவ் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றியதன், 75வது ஆண்டை முன்னிட்டு, வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 150 மீட்டர் உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சியின்போது, தீவுகளின் பெயர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

பிங்க் பியூட்டி.... கெளரி கிஷன்!

முதல்முறை ஆஸ்திரேலியா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கதாநாயகனாகும் இன்பநிதி! இயக்குநர் இவரா?

SCROLL FOR NEXT